உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழை நீரில் மூழ்கிய நெற்கதிர்கள்

மழை நீரில் மூழ்கிய நெற்கதிர்கள்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், 15,000 ஏக்கருக்கு மேல், பின் சொர்ணவாரி பருவத்தில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். அவை, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.புரட்டாசி மாதத்தில், இரு தினங்களாக, மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று, மாலை, 4:00 மணி நிலவரப்படி, ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, செம்பரம்பாக்கம் ஆகிய பகுதிகளில், தலா ஒரு செ.மீ., என, காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், 3 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.இந்த மழையால், இரு மனிதர்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளனர். அதேபோல, இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய தாலுக்காக்களில், ஆறு தற்காலிக மழை நிவாரண முகாம்களில், 195 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.கொட்டவாக்கம், வரதாபுரம், சிறுவள்ளூர், காரை, சீயட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கின.நீரில் மூழ்கிய நெற்கதிர் வயலில் இருந்து மழை நீரை வெட்டி எடுக்கும் பணியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர்.அதேபோல, விதைப்பாடு விதைத்திருக்கும் விவசாயிகளின் நிலங்களிலும் தண்ணீர் வடிய கால்வாய் ஏற்படுத்தி உள்ளனர்.மேலும், பருவம் தவறி காய் காய்க்கும் மா மரங்களின் இடையே தண்ணீர் சூழ்ந்து உள்ளது. பூங்காக்களில் மழைநீர் தேங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி