மேலும் செய்திகள்
3 கொள்முதல் நிலையங்கள் வாலாஜாபாதில் திறப்பு
27-Mar-2025
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், குண்ணவாக்கத்தில் ஏரி மற்றும் கிணற்று பாசனம் வாயிலாக விவசாயிகள், இரண்டு போகம் சாகுபடி செய்கின்றனர்.பருவ மழையை தொடர்ந்து சம்பா பட்டத்திற்கு, கடந்த டிசம்பரில், 500 ஏக்கர் பரப்பிலான விளை நிலங்களில் இப்பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.அப்பயிர்கள் கதிர் முற்றிய நிலையில், சில தினங்களாக அறுவடை பணிகளை துவக்கி உள்ளனர். அறுவடையான நெல்லை விற்பனை செய்ய விரைவாக நெல் கொள்முதல் நிலையம் அப்பகுதியில் துவக்க விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.அதன்படி, குண்ணவாக்கத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் நேற்று திறந்து வைத்தார். வாலாஜாபாத் தி.மு.க., ஒன்றிய செயலர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
27-Mar-2025