உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புத்தகரத்தில் நெல் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

புத்தகரத்தில் நெல் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது புத்தகரம் கிராமம். இக்கிராமத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ், 200 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது.மழைக்காலத்தில் இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், அத்தண்ணீரைக் கொண்டு அப்பகுதியில் உள்ள 350 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.அதன்படி, இந்த ஆண்டு பருவ மழைக்கு புத்தகரத்தில் ஏரி முழுமையாக நிரம்பியது. அதை தொடர்ந்து, அப்பகுதியில் நவரை பருவ சாகுபடிக்கு, 300 ஏக்கரில், விவசாயிகள் நெல் பயிரிட்டனர்.தற்போது, அப்பயிர்கள் செழிமையாக வளர்ந்து அமோக விளைச்சல் தந்துள்ளது. சாகுபடி காலத்தில் குறைவான பனிப்பொழிவு நிலவியதாகவும், மழைப்பொழிவும் அதிகம் இல்லாததால், பருவநிலைக்கு ஏற்ப, நல்ல விளைச்சல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.அடுத்த சில நாட்களில் இப்பயிர்கள் அறுவடை செய்ய உள்ளதால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை