உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  பள்ளியில் ஓவிய கண்காட்சி

 பள்ளியில் ஓவிய கண்காட்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில், ஓவிய கண்காட்சி நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி - கல்லுாரிகளின் ஓவியம் வரையும் மாணவர்கள் மற்றும் ஓவியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி மற்றும் கவிநிலா ஆர்ட்ஸ் அகாடமி சார்பில், காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய கண்காட்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ஏகாம்பரம் ஓவிய கண்காட்சியை துவங்கி வைத்தார். இக்கண்காட்சியில் 150க்கு மேற்பட்ட ஓவிய மாணவர்கள் மற்றும் ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஓவிய கண்காட்சியை பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி