உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  ஊராட்சி செயலர் பணி நேர்காணல்: 234 பேரின் மதிப்பெண் வெளியீடு

 ஊராட்சி செயலர் பணி நேர்காணல்: 234 பேரின் மதிப்பெண் வெளியீடு

காஞ்சிபுரம்:ஊராட்சி செயலர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்தவர்களின் மதிப்பெண் பட்டியல், ஊரக வளர்ச்சித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 55 ஊராட்சி செயலர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கு, 234 பேர் நேர்காணலில் பங்கேற்க, ஊரக வளர்ச்சி துறை அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, கீழம்பி திருமலை பொறியியல் கல்லுாரியில், டிச., 12ல் நடக்க இருந்த நேர்காணல், நிர்வாக காரணங்களை கூறி ரத்து செய்யப்பட்டு உள்ளது. தற்போது, யாருக்கு முன்னுரிமை என்று அறியும் வகையில், நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட 234 பேரின் மதிப்பெண் பட்டியல், ஊரக வளர்ச்சி துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு பதவிக்கு ஐந்து பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அவர்களில் யார் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பதை தெளிவாக காட்டும் வகையில், மதிப்பெண் பட்டியல் இருப்பதாக, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை