உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மகள் இறப்பில் சந்தேகம் பெற்றோர் போலீசில் புகார்

மகள் இறப்பில் சந்தேகம் பெற்றோர் போலீசில் புகார்

உத்திரமேரூர்:மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். உத்திரமேரூர் தாலுகா, திருமுக்கூடல் கிராமத்தை சேர்ந்த பாலாஜி, 40. இவரது மனைவி சரளா, 38. நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாமல் இறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சரளாவின் இறுதி சடங்கிற்கு அவரின் பெற்றோர் அரக்கோணம் பகுதியில் இருந்து, திருமுக்கூடலுக்கு வந்திருந்தனர். அவர்கள் தனது மகள் உடல்நிலை சரியில்லாமல் இறக்கவில்லை. அவளது இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். சரளாவின் தாயார் சரஸ்வதி மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, சாலவாக்கம் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்படி, உடலை கைப்பற்றிய போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி