உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பழுதடைந்த பள்ளி கட்டடம் அகற்ற பெற்றோர் வலியுறுத்தல்

பழுதடைந்த பள்ளி கட்டடம் அகற்ற பெற்றோர் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் காலனியில், விஷ்ணு காஞ்சி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.பள்ளி வளாகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, ஓடு வேய்ந்த பழைய கட்டடம் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், புதிதாக ‛கான்கிரீட்' கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து புதிய கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இருப்பினும், பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டடம் அகற்றப்படாமல் உள்ளது. இக்கட்டடத்தை சுற்றிலும் புதர் மண்டியுள்ளதால், விஷ ஜந்துக்கள் புதரில் தஞ்சமடைந்துள்ளன.இதனால், அருகில் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கும், நடுநிலைப் பள்ளி மாணவ- - மாணவியருக்கும் விஷஜந்துக்களால் அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உள்ளது.மேலும், சிதிலமடைந்த கட்டடம் இடிந்து விழுந்தால் பள்ளி மாணவர்கள், அங்கன்வாடி குழந்தைகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் காலனி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில், பயன்பாட்டில் இல்லாமல் பழைய பள்ளி கட்டடத்தை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பள்ளியில் பயிலும் மாணவ- - மாணவியரின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை