குழந்தைகள் புத்தகங்களை ஆர்வத்தோடு வாங்கும் பெற்றோர்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிப்., 10 வரை நடைபெறும் புத்தக திருவிழாவில், பல்வேறு பதிப்பகங்கள், ஆயிரக்கணக்கான தலைப்பில், லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைத்துள்ளன.நாவல், வரலாறு, சமகால அரசியல், அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் என தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் முக்கியமான புத்தகங்கள் உள்ளன. பல வாசகர்கள் அதிக எண்ணிக்கையிலான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி செல்வதை அன்றாடம் பார்க்க முடிகிறது. பக்தி இலக்கியம், நாவல், குழந்தைகள் புத்தகம் என பல வகையான புத்தகங்களை வாசகர்கள், பெற்றோர் பலரும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.----------------வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியாமகளிர் ஆரோக்கியமும் மருத்துவத் தீர்வுகளும்டோல்ப்ரீ:18004257700ஆசிரியர் : கீதா கெங்கையாபக்கம் : 280விலை : 380பெண்கள் தங்களின் உடலை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும், பெண் பிள்ளைகள் வளரும்போது அவர்களுக்கு கொடுக்க கூடிய உணவுகள், தவிர்க்க வேண்டிய உணவுகள் போன்றவை பற்றி விரிவாக இந்நுாலில் கொடுக்கப்பட்டுள்ளது. உணவில் உள்ள சத்துக்கள் பற்றியும், பெண்களுக்கு ஏற்படும் நோய்கள், அவற்றை தடுக்கும் முறைகள் பற்றியும் ஏராளமான தகவல்கள் இந்நுாலில் கொடுக்கப்பட்டுள்ளன.------------------------------ரத்தத்தின் ரத்தமேஆசிரியர் : எஸ்.ரஜத்பக்கம் : 180விலை : 230முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.,பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்கள் இந்நுாலில் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் ஆகியோரிடம் பேட்டி கண்டு, எம்.ஜி.ஆர்.,பற்றிய பல்வேறு தகவல்களை, இப்புத்தகத்தில் ஆசிரியர் வழங்கியுள்ளார். திரைத்துறையில் எம்.ஜி.ஆர்., உடன் பழகிய நாட்கள் பற்றி, நினைவு கூர்ந்து பலரும் தங்களது கருத்துக்களை இந்நுாலில் தெரிவித்துள்ளனர்.------------------புத்தக திருவிழாவில் இன்று :இயக்குனர் அஜயன். பாலா என்னை செதுக்கிய எழுத்தாளர்கள்பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் - பட்டிமன்றம் - அறிவியல் வளர்ச்சியால் கலைகளும் வாசிப்பும் வளர்கிறதா? தளர்கிறதா?புத்தக கண்காட்சியில் பல புத்தகங்களை தேடி தேடி பலரும் வாங்குவது மகிழ்ச்சியாக உள்ளது. ஆண்கள், பெண்கள் பேதமின்றி அவர்கள் விரும்பிய புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். வரலாற்று புத்தகங்களை இன்றைய காலத்து இளைஞர்கள் விரும்பி வாங்குவது இப்போது பார்க்கிறேன்.- டி.ஆர்.பங்கஜவள்ளி,காஞ்சிபுரம்ஏராளமான புத்தகங்கள் இங்கு உள்ளது. கலை நிகழ்ச்சிகளும் இங்கு நடத்துவது இளைஞர்கள் இங்கு வருவதற்கு ஆர்வமாக இருக்கும். என்னை போன்ற மாணவர்களுக்கு, புத்தக திருவிழா ஆர்வமாக இருக்கும். அறிவியல், எம்.பி.,ஏ.,படிப்பு தொடர்பாக பல புத்தங்களை இங்கு பார்க்க முடிந்தது.- வி.சங்கரநாராயணன்,திருநெல்வேலி.