மேலும் செய்திகள்
இன்று இனிதாக காஞ்சிபுரம்
3 hour(s) ago
வாக்காளர் சிறப்பு முகாமில் 24,864 மனுக்கள் ஏற்பு
3 hour(s) ago
சென்னை: சென்னையில் ரயில் நிலையங்களில், டிக்கெட் கவுன்டர்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க, தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டு, முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டது. தெற்கு ரயில்வேயில், தற்போது 180 இடங்களில், 433 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, சென்னை ரயில்வே கோட்டத்தில், 70 இடங்களில் 143 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் உள் ளன. ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள், தனியார் நபர்களை நியமனம் செய்து, தானியங்கி டிக்கெட் இயந்திரம் வாயிலாக, டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், போதிய ஆட்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதனால், பல இடங்களில், பயணியர் அதை பயன்படுத்துவதில்லை. மேலும் அவ்வப்போது இயந்திரம் பழுதாகிறது. இதனால், பயணியர் வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற வேண்டி உள்ளது. இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது: கடற்கரை, எழும்பூர், தாம்பரம், அரக்கோணம், ஆவடி, செங்கல்பட்டு, பெரம்பூர், மாம்பலம், கூடுவாஞ்சேரி உட்பட பல்வேறு ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் உள்ளன. ஆனால், பல்வேறு நேரங்களில், ஆட்கள் இல்லாமல் காலியாக இருக்கின்றன. சில இடங்களில், இயந்திரம் பழுதாகி காட்சி பொருளாக உள்ளது. எனவே, பயணியர் நலன் கருதி, தானியங்கி இயந்திரங்களை, முழு அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர, தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
3 hour(s) ago
3 hour(s) ago