உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  ஊத்துக்காடில் தடம் எண் 79 அரசு பஸ் நிற்காமல் செல்வதால் பயணியர் அவதி

 ஊத்துக்காடில் தடம் எண் 79 அரசு பஸ் நிற்காமல் செல்வதால் பயணியர் அவதி

வாலாஜாபாத்: ஊத்துக்காடு கூட்டுச்சாலையில், தடம் எண் 79, நிற்காமல் செல்வதால், பயணியர் அவதியடைந்து வருகின்றனர். வாலாஜாபாதில் இருந்து, ஒரகடம், படப்பை வழியாக தாம்பரத்தை இணைக்கும் நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலையில், வாலாஜாபாத் அடுத்து ஊத்துக்காடு கூட்டுச்சாலை உள்ளது. ஊத்துக்காடு எல்லையம்மன் கோவிலுக்கு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பேருந்துகள் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்கள், ஊத்துக்காடு கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ உள்ளிட்டவை மூலம் கோவிலுக்கு சென்றடைகின்றனர். மேலும், புத்தகரம், மருதம், கரூர், சின்னி வாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்தோர், ஊத்துக்காடு கூட்டுச்சாலையிலிருந்து, பேருந்து பிடித்து பல பகுதிகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில், தாம்பரம் - காஞ்சிபுரம் தடத்திலான அரசு பேருந்து தடம் எண்79, ஊத்துக்காடு கூட்டுச்சாலையில் சரிவர நிற்காமல் செல்வதாகவும், இதனால் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். எனவே, ஊத்துக்காடு பேருந்து நிறுத்தத்தில் தடம் எண்79 உள்ளிட்ட அனைத்து வகை அரசு பேருந்துகளும் நின்று செல்ல, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ