உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நடைபாதையில் வீசப்பட்ட மரக்கிளைகள் காஞ்சிபுரத்தில் பாதசாரிகள் அவதி

நடைபாதையில் வீசப்பட்ட மரக்கிளைகள் காஞ்சிபுரத்தில் பாதசாரிகள் அவதி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவில், பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களின் கிளைகள் சாலை பக்கம் நீண்டு வளர்ந்து இருந்தன. இதனால், சாலையோரம் உள்ள மின் ஒயர்களில் மரக்கிளைகள் உரசும் நிலை இருந்தது.இதையடுத்து, மின் விபத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின் வாரியத்தின் இடையூறு மரக்கிளைகளை வெட்டி சாய்த்தனர். வெட்டப்பட்ட மரக்கிளைகளை உடனடியாக அப்புறப்படுத்தாமல், சாலையோரம் உள்ள நடைபாதை மீது போட்டுள்ளனர்.வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இப்பகுதியில், நடைபாதையில் செல்ல வேண்டிய பாதசாரிகள், சாலையில் நடந்து செல்கின்றனர். இதனால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, வாகன போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கு இடையூறாகவும் நடைபாதையில் போடப்பட்டுள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை