உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 3 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் உத்திரமேரூர் மக்கள் அவதி

3 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் உத்திரமேரூர் மக்கள் அவதி

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் ராட்சத குழாய் உடைந்து மூன்று நாட்களாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 40,000 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு வெங்கச்சேரி செய்யாற்றில் இருந்து, 15 கிலோ மீட்டர் துாரத்திற்கு ராட்சத குழாய் வாயிலாக குடிநீர் கொண்டு வரப்படுகிறது.இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன் இந்த ராட்சத குழாய் மணல்மேடு, திருப்புலிவனம் ஆகிய பகுதிகளில் உடைந்து குடிநீர் வினியோகம் செய்வது தடைபட்டது.இதனால், உத்திரமேரூர் பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள், மூன்று நாட்களாக தவித்து வருகின்றனர். தற்போது, உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்யும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் கூறியதாவது:உத்திரமேரூர் பேரூராட்சிக்கு வெங்கச்சேரி செய்யாற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படும் ராட்சத குழாய் இரண்டு இடத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது, அதை சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அதற்கான பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு குடிநீர் மீண்டும் தடையின்றி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி