மேலும் செய்திகள்
நாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதி
10 minutes ago
வாலாஜாபாதில் அவசர சிகிச்சை பிரிவு: ஜனவரியில் திறக்க முடிவு
12 minutes ago
தி.மு.க.,வை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
12 minutes ago
வாலாஜாபாத்: வாலாஜாபாதில், கைவிடப்பட்ட பழைய வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதால், இடித்து அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சி, 10வது வார்டில் கோபால் நாயுடு தெரு உள்ளது. இத்தெரு பகுதியில் செயல்பட்டு வந்த வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் மிகவும் பழுதடைந்ததை அடுத்து பயன்பாட்டிற்கு லாயக்கற்றதாக கைவிடப்பட்டது. இதையடுத்து, பழுதான கட்டடத்தின் அருகாமையில் புதிய கட்டடத்தில், தற்போது வி.ஏ.ஓ., அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில், கைவிடப்பட்ட பழைய கட்டடத்தை சுற்றியும், கூரையிலும் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. இதனால், இக்கட்டடம் பாம்பு, தேள் உள்ளிட்ட பல வகையான விஷ ஜந்துக்கள் குடியிருப்புக்கான புகலிடமாக மாறி வருகிறது. எனவே, வாலாஜாபாதில், கைவிடப்பட்ட பழைய வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 minutes ago
12 minutes ago
12 minutes ago