உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு

மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில், சடலங்களை அடக்கம் செய்ய போதுமான மயான வசதி இல்லாத நிலை உள்ளது. இதற்காக வாலாஜாபாத் பேரூராட்சி, வல்லப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு டெண்டர் விடுதல் உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில், வல்லப்பாக்கத்தில் மின் மயானம் அமைக்க தேர்வு செய்துள்ள இடத்தை சுற்றி குடியிருப்புகள் உள்ளதாகவும், இறந்தவர்களை எரியூட்டும் போது சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் காற்று மாசு போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும் எனவும் கூறினர். இதையடுத்து அப்பகுதி மக்கள் மின் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி நேற்று வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து மனு அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி