உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரயில்வே சுரங்கப்பாதை பணி விரைந்து முடிக்க அண்ணாமலையிடம் மனு

ரயில்வே சுரங்கப்பாதை பணி விரைந்து முடிக்க அண்ணாமலையிடம் மனு

காஞ்சிபுரம்: 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை பயணமாக காஞ்சிபுரம் வந்த, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம், காஞ்சிபுரம் கனகதுர்கை அம்மன் நகர் மற்றும் அன்னை இந்திரா நகர் குடியிருப்போர் நல்வாழ்வு சங்க தலைவர் கதிர்வேலு, செயலர் பிரகாஷ் ஆகியோர், பகுதியினர் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.மனு விபரம்:காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகில் உள்ள அன்னை இந்திரா நகர் மற்றும் விரிவாக்க பகுதியில் 2,000த்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இரண்டு ஆண்டுகளுக்கு முன், பொன்னேரி ஏரியில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்ட அன்றே, எங்கள் பகுதிக்கு செல்ல, நாங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த ரயில்வே கேட் மூடப்பட்டு, அப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது.கடவுப்பாதையின் கீழ் மினி சுரங்கப்பாதை அமைக்கும் பணி மந்தகதியில் நடந்து வருகிறது. இதனால், மேம்பாலம் வழியாக நெல்மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மாட்டு வண்டியில் செல்ல விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.சைக்கிளில் செல்லும் குழந்தைகள், பெரியவர்கள் சிரமப்படுகின்றனர். அதிவேகமாக வரும் வாகனங்களால் நடந்து செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, புதிய ரயில் நிலையம் கடவுப்பாதையில் சுரங்கப்பாதை அமைக்கும் கட்டுமானப்பணியை விரைந்து முடித்து, தாங்களே சுரங்கப்பாதையை திறந்து வைக்க 2,000த்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மற்றும் சங்கம் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்