உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வீட்டுமனை பட்டா கோரி கலெக்டரிடம ் மனு

வீட்டுமனை பட்டா கோரி கலெக்டரிடம ் மனு

வாலாஜாபாத்:வாரணவாசி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் வீட்டுமனை பட்டா இல்லாத குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் அப்பகுதி ஊராட்சி தலைவர் மனு அளித்துள்ளார். மனு விபரம்: வாரணவாசி ஊராட்சியில், வாரணவாசி, தாழையம்பட்டு, ராமானுஜபுரம், அளவூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளடங்கி உள்ளன. இந்த கிராமங்களில், பல ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலங்களில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா இல்லாததால் அரசு இலவச வீடு உள்ளிட்ட சலுகைகள் பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. எனவே, வாரணவாசி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் வீட்டுமனை பட்டா இல்லாதோர் குறித்து முறையாக ஆய்வு செய்து மனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை