உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அனுமதியின்றி பனை மரங்கள் அகற்றம் ஊத்துக்காடு வி.ஏ.ஓ., மீது கலெக்டரிடம் மனு

அனுமதியின்றி பனை மரங்கள் அகற்றம் ஊத்துக்காடு வி.ஏ.ஓ., மீது கலெக்டரிடம் மனு

வாலாஜாபாத், வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த மக்கள் குறை கேட்பு முகாமில் பங்கேற்று, கலெக்டர் கலைச்செல்வியிடம் மனு அளித்தார்.அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு கிராமத்தில், பனஞ்சோலை நிலங்களை அதன் உரிமையாளர்கள் தனியாருக்கு விற்பனை செய்துள்ளனர்.இந்நிலங்களில் இருந்த 50க்கும் மேற்பட்ட பனை மரங்கள், கலெக்டர் அனுமதி ஏதுமின்றி, கடந்த 23ம் தேதி வேரோடு அகற்றப்பட்டன. விவசாயிகளிடம் இருந்து நிலங்களை தனியாருக்கு வாங்கி கொடுத்த ஊத்துக்காடு கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன், பனை மரங்கள் அகற்றம் செய்ய உதவியாக இருந்துள்ளார்.பனை மரங்கள் அழிவதை தடுத்து, அதன் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், கலெக்டர் அனுமதி இல்லாமல் இப்பகுதியில் பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.இதுகுறித்து, முறையாக விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நில உரிமையாளர் மற்றும் ஊத்துக்காடு கிராம நிர்வாக அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை