மேலும் செய்திகள்
மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம்
16-Dec-2025
கா ஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி சாலை வழியாக செவிலிமேடு, சின்ன காஞ்சிபுரம் டோல்கேட், உத்திரமேரூர், வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், மின்வாரிய அலுவலகம் அருகில், சாலையோரம் மணல் குவியலாக உள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனங்களுக்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, மணல் குவியலில் தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்குகின்றனர். எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், ஓரிக்கை மிலிட்டரி சாலையோரம், போக்குவரத்துக்கு இடையூறாக குவிந்துள்ள மணல் குவியலை அகற்ற நெடுஞ் சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஆர்.ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம்.
16-Dec-2025