முடிச்சூர் பெரிய ஏரிக்கரையில் 5,200 பனை விதைகள் நடவு
காஞ்சிபுரம்:விதைகள் தன்னார்வ அமைப்பின் நான்காம் ஆண்டு, 1 லட்சம் பனை விதை நடவு செய்யும் திருவிழாவின் ஒரு பகுதியாக முடிச்சூர் பெரிய ஏரிக்கரையில் பனை விதை நடவு செய்யும் நிகழ்ச்சியை முடிச்சூர் ஊராட்சி தலைவர் தாமோதரன் துவக்கி வைத்தார்.இதில், திருவேணி அகாடமி தேசிய பசுமை படை மாணவர்கள், முடிச்சூர் குடியிருப்போர் நல சங்க கூட்டமைப்பு, கோல்டன் ஹாட்ஸ் லயன் சங்கம் மற்றும் ஸ்ரீயோக ஆஞ்சநேயர் அன்னதான குழுவினர் இணைந்து, 1 கிலோ மீட்டருக்கு, பெரிய ஏரிக்கரை முழுவதும் 5,200 பனை விதைகள் நடவு செய்தனர்.