மேலும் செய்திகள்
மழை சீசனில் மரக்கன்றுகள் நடவு
19-Dec-2024
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது திருமுக்கூடல் கிராமம். இக்கிராமத்தை சுற்றிலும் கடந்த ஆண்டுகளில், கல் குவாரி மற்றும் கிரஷர்கள் ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகிறது. இதனால், தொழிற்சாலை புகை மற்றும் மண் புழுதி போன்றவையால் சுற்றுச்சூழல் மாசடைந்து வந்தது.எனவே, இப்பகுதியில் பசுமை மற்றும் இயற்கை அரண் ஏற்படுத்த பலதரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், திருமுக்கூடலில் குறுங்காடு அமைக்க, 'சங்கல்ப்தாரு பவுண்டேஷன்' முன்வந்துள்ளது. இதற்காக, அப்பகுதி ஏரிக்கு அருகே உள்ள 50 ஏக்கர் பரப்பளவில் நிலம் தேர்வு செய்யப்பட்டு, ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டது.முதற்கட்டமாக மரக்கன்றுகள் நடவுக்கான துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், அப்பகுதி ஊராட்சி தலைவர் மஞ்சுளா உள்ளிட்டோர் பங்கேற்று, மரக்கன்றுகளை நடவு செய்தனர்.வில்வம், மகாகணி, புங்கன், பூவரசன், நாவல், வேம்பு, இலுப்பை உள்ளிட்ட 30,000 நாட்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. சோலார் பாசன பம்புகள் வாயிலாக சொட்டுநீர் பாசனம் செய்து, மூன்று ஆண்டுகள் பவுண்டேஷன் சார்பில் பராமரிக்கப்பட்டு, பின் ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
19-Dec-2024