வாலிபருக்கு போக்சோ
காஞ்சிபுரம்:உத்திரமேரூர் தாலுகாவிற்குட்பட்ட, அரசாணைமங்கலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த 16 வயது சிறுமி. இவர், கடந்த 16ம் தேதி, வீட்டில் துாங்கி கொண்டிருந்தார்.அப்போது, அதே ஊரைச் சேர்ந்த இளஞ்செழியன், 35. என்பவர், சிறுமியின் வீட்டிற்குள் சென்று, அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து, சிறுமியின் அக்கா, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, பாலியல் தொல்லை அளித்ததாக இளஞ்செழியனை, போலீசார், 'போக்சோ' சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.