மேலும் செய்திகள்
அவளூர் சிங்கேஸ்வரர் கோவிலில் கோபுர சிலைகள் சேதம்
25-Mar-2025
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், பூசிவாக்கம் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ராமலிங்கஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், தற்போது மிகவும் சிதிலமடைந்து கருவறை உள்ளிட்ட சில பகுதி கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன.கோவில் தளத்தின் மீது அடிக்கடி வளரும், செடி, கொடி மற்றும் மரக்கன்றுகளை அவ்வப்போது துாய்மைப் பணிகள் மேற்கொண்டு அகற்றப்பட்டாலும், மழைப்பொழிவு ஏற்பட்டால் மீண்டும் துளிர்க்கும் நிலை உள்ளது. இதனால், கோவில் கட்டடம் நாளுக்குநாள் பலவீனம் அடைந்து வருகிறது.இக்கோவிலை புனரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என, அப்பகுதியினர் புலம்புகின்றனர்.இதுகுறித்து, பூசிவாக்கம் கிராமத்தினர் கூறியதாவது:ராமலிங்கஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் குத்தகை விடப்பட்டு அறநிலையத் துறைக்கு வருவாய் இனமாக உள்ளது. 30 ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாத இக்கோவிலில் தற்போது ஒருகால பூஜை நடைபெறுகிறது.எனினும், கோவில் ஆபத்தான நிலையில் உள்ளதால், வழிபாட்டுக்கு உள்ளே சென்று வர பக்தர்கள் அச்சப்படும் நிலை உள்ளது.எனவே, இக்கோவிலை தொன்மை மாறாமல் புனரமைத்து வழிபாட்டிற்கு விட, அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
25-Mar-2025