காஞ்சிபுரத்தில் வரும் 30ல் அஞ்சல் சேவை குறைதீர் முகாம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், அஞ்சல் சேவை குறை தீர்வு முகாம், நாளை மறுதினம் நடைபெற உள்ளது என, அஞ்சல் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், அஞ்சல் கோட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, நாளை மறுதினம், மாலை 3:00 மணிக்கு, அஞ்சல் சேவை குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது.அஞ்சல் வாடிக்கையாளர், ஏதேனும் குறைகள் இருந்தால், தணிக்கை அலுவலர், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு, இன்று மாலை நேரில் அல்லது தபால் வாயிலாக அனுப்பலாம். மேலும், அஞ்சல் சேவை குறை தீர்வு முகாமில், நேரிலும் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.