உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  பொங்கலுக்கான மண் பானைகள் உத்திரமேரூரில் தயாரிப்பு தீவிரம்

 பொங்கலுக்கான மண் பானைகள் உத்திரமேரூரில் தயாரிப்பு தீவிரம்

உத்திரமேரூர்: பொங்கல் பண்டிகையையொட்டி, உத்திரமேரூரில் மண்பாண்ட தொழிலாளர்கள், பொங்கல் வைப்பதற்கான மண் பானைகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, வரும் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம், ஆண்டிதாங்கல் உள்ளிட்ட பகுதியில், மண்பாண்ட தொழிலாளர்கள், பொங்கல் வைப்பதற்கான மண் பானைகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வேடபாளையத்தை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர் ரங்கன் கூறுகையில், ''கடந்த ஒரு மாதமாக மண் பானை தயாரித்து வருகிறோம். 1.5 லிட்டர் கொள்ளளவு உள்ள மண் பானை, 100 ரூபாய்க்கு விற்கிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை