மேலும் செய்திகள்
ஆரம்ப சுகாதார நிலைய கட்டட பணிகள் 'விறுவிறு'
10-Nov-2025
உத்திரமேரூர்: --களியாம்பூண்டியில், ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டட கட்டுமான பணி, வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் தாலுகா, களியாம்பூண்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்திற்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். இங்கு, கர்ப்பிணியர் பரிசோதனை, குழந்தைகள் பரிசோதனை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால், அங்கு வரும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். எனவே, கூடுதல் கட்டடம் கட்ட அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, 2025 --- 26ம் நிதி ஆண்டில், 15வது நிதிக்குழு சுகாதார மானிய திட்டத்தின் கீழ், 1.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமான பணி இரு மாதத்திற்கு முன் துவக்கப்பட்டு, மும்முரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார மைய, கூடுதல் கட்டடம் கட்டும் பணியில், அடித்தளம் அமைக்கப்பட்டு 20 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இன்னும், இரண்டு மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு, கட்டடம் பயன்பாட்டுக்கு வரும்' என்றார்.
10-Nov-2025