மேலும் செய்திகள்
அரசு கலைக்கல்லுாரியில் கலைத்திருவிழா
24-Sep-2025
காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்து ாரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் மேலாண்மை துறை சார்பில், நவா எக்ஸ்போ - 2025' என்ற விழா கடந்த 22ம் தேதி மு தல் நடந்து வருகிறது . இதில், மாணவர்கள் தங்களின் திறன்களை எடுத்துரைக்கும் வகையில் கண்காட்சி, பொருட்காட்சி, பேச்சு, கவிதை, எழுத்து, ஓவியம், பாட்டு, நடனம், கிராமிய இசை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில், கல்லுாரி முதல்வர் கலைராம வெங்க டேசன் கோப்பைகள் மற்றும் சான்றிதழ் வழங்கினார். மேலாண்மை துறை தலைவர் முனைவர் விக்ரமன் வரவேற்றார். கல்லுாரி வேலை வாய்ப்பு பிரிவு அலுவலர் வினுசக்கரவர்த்தி நன்றி கூறினார்.
24-Sep-2025