உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இரட்டை கால்வாயில் கோரைப்புல் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

இரட்டை கால்வாயில் கோரைப்புல் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

செவிலிமேடு: காஞ்சிபுரம் செவிலிமேடு இரட்டை கால்வாயில் கோரைப்புல் வளர்ந்துள்ளதால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் செவிலிமேடு ஜெம்நகரில் இருந்து, அதியமான் நகர், எம்.ஜிஆர்., நகர், சதாசிவம் நகர், ஆசிரியர் நகர் வழியாக தேனம்பாக்கம் ஏரிக்கு மழைநீர் செல்லும் வகையில் இரட்டை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கால்வாயில் கோரைப்புல் அதிகளவு வளர்ந்துள்ளது. இதனால், இப்பகுதியில் மழை பெய்தால், இரட்டை கால்வாய் வழியாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இரட்டை கால்வாயை துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை