மேலும் செய்திகள்
திருவெண்ணெய்நல்லுாரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
18-Sep-2025
வாலாஜாபாத்:வீட்டு மனை பட்டா வழங்குவதாக அறிவித்து 28 ஆண்டுகளாகியும், அதற்கான நடவடிக்கை எடுக்காத வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்து, வல்லம்பாக்கம் கிராம மக்கள் நேற்று, வாலாஜாபாத் தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வாலாஜாபாத் பேரூராட்சி, 5வது வார்டில் வல்லப்பாக்கம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள 176 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு, தலா, 2.5 சென்ட் வீதம் வீட்டு மனை பட்டா வழங்க, 1996 - 97ம் ஆண்டில், நிலம் ஒதுக்கப்பட்டது. இதற்கான வரைப்படம் தயாரிக்கப்பட்டு, 28 ஆண்டுகள் ஆகியும், அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், வருவாய்த் துறையை கண்டித்து, வல்லப்பாக்கம் கிராம மக்கள் நேற்று வாலாஜாபாத் தாசில்தார் அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வல்லப்பாக்கம் கிராம குடியிருப்போர் நல சங்க தலைவர் கேசவன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
18-Sep-2025