உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வீடு கட்ட அளவீடு செய்யும் பணி ஒரக்காட்டுப்பேட்டையில் எதிர்ப்பு

வீடு கட்ட அளவீடு செய்யும் பணி ஒரக்காட்டுப்பேட்டையில் எதிர்ப்பு

உத்திரமேரூர், உத்திரமேரூர் தாலுகா, ஒரக்காட்டுப்பேட்டை கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்கள், வீட்டுமனை பட்டா வழங்க, கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்படி, கடந்த இரண்டு மாதத்திற்கு முன், அதே பகுதியில் ஒரக்காட்டுப்பேட்டையை சேர்ந்த, மூன்று இருளருக்கும், காவித்தண்டலம் கிராமத்தை சேர்ந்த, நான்கு பேருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.இந்நிலையில், அந்த ஏழு பேருக்கும், அரசு தொகுப்பு வீடுகள் ஒதுக்கப்பட்டு, புதிய வீடுகள் கட்ட அளவீடு செய்யும் பணியை, உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி துறையினர், நேற்று மேற்கொண்டனர்.அப்போது, ஒரக்காட்டுப்பேட்டை கிராம மக்கள், எங்கள் கிராமத்தில் ஏன் வெளியூரை சேர்ந்தவர்களுக்கு வீட்டுமனை வழங்குகிறீர்கள் என கேட்டு, அளவீடு செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் நாகப்பன், ஒரக்காட்டுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு, கூடுதலாக வீட்டுமனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கூறியதையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி