உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பஸ் நிறுத்தம் இடம் மாற்றம் புளியம்பாக்கத்தில் எதிர்ப்பு

பஸ் நிறுத்தம் இடம் மாற்றம் புளியம்பாக்கத்தில் எதிர்ப்பு

வாலாஜாபாத், சென்னை -- கன்னியாகுமாரி தொழிற்தடம் திட்டம் சார்பில், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை விரிவாக்க பணி, கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறுகிறது.சாலை விரிவாக்கத்திற்காக, சாலையோரம் இருந்த பயணியர் நிழற்குடை கட்டடங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.இந்நிலையில், தற்போது சாலை பணி முடிவுற்ற பகுதிகளில், புதிதாக பயணியர் நிழற்குடை வசதி ஏற்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.அதன்படி, புளியம்பாக்கம் பிரதான சாலையில், புதிய நிழற்குடை கட்ட நில அளவீடு உள்ளிட்ட பணிகள், நேற்று மேற்கொள்ளப்பட்டன.ஆனால், பேருந்து நிறுத்தமாக தற்போது பயன்படுத்தும் பகுதியில், போதுமான இடவசதி இல்லாததால், அங்கிருந்து 400 மீட்டர் துாரத்தில் நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.புதிய இடத்தில் நிழற்குடை அமைத்து, பேருந்து நிறுத்தத்தை இடம் மாற்றம் செய்வது, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என, அப்பகுதிவாசிகள் அங்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.குடியிருப்புகளுக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தம் மற்றும் நிழற்குடை வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.இதையடுத்து, புளியம்பாக்கத்தில் நிழற்குடை கட்டடத்திற்கான பணி, நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி