பழங்குடியின குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கல்
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் புறம்போக்கு நிலங்களில் வசித்த பழங்குடியினருக்கு, ஊத்துக்காடு கிராமத்தில் மனை பட்டா வழங்கி அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிதரப்பட்டுள்ளது.இப்பகுதியில், 176 இருளர் குடும்பத்தினர் தற்போது வசிக்கின்றனர். வடகிழக்கு பருவ மழை கராணமாக, இப்பகுதி பழங்குடியினர் மக்கள் கடந்த சில நாட்களாக வேலை வாய்ப்பின்றி முடங்கி உள்ளனர்.இதையடுத்து, வாலாஜாபாத் மாவட்ட ஒன்றியக்குழு உறுப்பினர் பொற்கொடி தன் சொந்த செலவில், அப்பகுதியைச் சேர்ந்த 176 பழங்குடியின குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, துவரை, உளுந்து உட்பட மளிகை தொகுப்புகள் வழங்க முன்வந்தார்.இதையடுத்து, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று நிவாரண பொருட்களை வழங்கினார். வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், வாலாஜாபாத் பேரூராட்சி கவுன்சிலர் அசோக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.