உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பறிமுதல் வாகனங்கள் வரும் 26ல் பொது ஏலம்

பறிமுதல் வாகனங்கள் வரும் 26ல் பொது ஏலம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் பிற காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 27 இருசக்கர வாகனங்களும், ஒரு லாரி என, 28 வாகனங்கள், வரும் 26ம் தேதி காலை 10:00 மணிக்கு, காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளது.வாகனங்கள் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம் அருகே பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வாகனங்களை ஏலம் கேட்பவர்கள் முன் வைப்பு கட்டண தொகையாக 1,000 ரூபாயை, மதுவிலக்கு அமல்பிரிவு, அலுவலகத்தில் வரும் 21 மற்றும் 25ம் தேதிகளில், காவல் ஆய்வாளரிடம் ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.வாகனத்தை ஏலம் எடுப்போர் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். வாகனத்தின் விபரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீட்டு தொகை, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.மேலும், வாகனங்களை முன்கூட்டியே பார்வையிடலாம். ஏலத்தில் பங்கேற்று வாகனம் எடுக்காதவர்களுக்கு, முன் வைப்பு தொகை ஏலத்தின் முடிவில் திருப்பித் தரப்படும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ