உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நர்சிங் சீட் கேட்டு மிரட்டல் புரட்சி பாரதம் நிர்வாகி கைது

நர்சிங் சீட் கேட்டு மிரட்டல் புரட்சி பாரதம் நிர்வாகி கைது

காஞ்சிபுரம்:தனியார் கல்லுாரி நர்சிங் சீட் கேட்டு, கல்லுாரி நிர்வாக அதிகாரிகளை மிரட்டிய, புரட்சி பாரதம் கட்சி ஒன்றிய செயலரை போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, தண்டலம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத், 38. புரட்சி பாரதம் கட்சி ஒன்றிய செயலர்.இவர், தண்டலம் கிராமத்தில் உள்ள சவீதா தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், அதே பகுதியைச் சேர்ந்த மாணவருக்கு, பி.எஸ்சி., நர்சிங் சீட் கொடுக்கும் படி நிர்வாக அதிகாரிகளிடம் தகராறு செய்துள்ளார்.இதற்கு, தனியார் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் சீட் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு, டெண்டர் வழங்கும் படி கோபிநாத் மிரட்டி உள்ளார்.இதுகுறித்து, தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அலுவலக அதிகாரி சண்முகம் என்பவர், ஸ்ரீபெரும்புதுார் போலீசில் அளித்த புகாரின்படி, கோபிநாத் என்பரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி