மேலும் செய்திகள்
யதோக்தகாரி பெருமாள் யானை வாகனத்தில் உலா
28-Mar-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், நடப்பாண்டு பங்குனி பிரம்மோத்சவம், கடந்த மாதம் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், எழுந்தருளிய யதோக்தகாரி பெருமாள் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். மூன்றாம் நாள் உத்சவமான மார்ச் 24ம் தேதி காலை கருடசேவை உத்சவமும், இரவு ஹனுமந்த வாகன உத்சவமும் நடந்தது.ஏழாம் நாள் உத்சவமான மார்ச் 28ம் தேதி காலை தேரோட்டம் விமரிசையாக நடந்தது. ஒன்பதாம் நாள் உத்சவமான மார்ச் 30ம் தேதி காலை ஆள்மேல் பல்லக்கும், தொடர்ந்து பொய்கையாழ்வார் திருக்குளத்தில் தீர்த்தவாரி உத்சவமும் நடந்தது.கடந்த மாதம், 31ம் தேதி, மதியம் 2:00 மணிக்கு த்வாதசாராதனம், திருவாய்மொழி சாற்றுமறையும், மாலை வெட்டிவேர் சப்பரத்துடன் 10 நாட்களாக நடந்து வந்த பிரம்மோத்சவம் நேற்றுடன் நிறைவு பெற்றது.இதை தொடர்ந்து, நாளை மறுதினம், மாலை 6:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு உத்சவம் நடக்கிறது. இதில், மல்லி, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளும் யதோக்தகாரி பெருமாள், சின்ன காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெரு, சி.எஸ்., செட்டித் தெரு, வரதராஜ பெருமாள் மாட வீதியில் உலா வருகிறார்.
28-Mar-2025