வரும் 12ல் ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொது வினியோக திட்டம் சார்பில், குறைதீர் கூட்டங்கள் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொது வினியோக திட்டம் சார்பில், குறைதீர் கூட்டம், வரும் 12ம் தேதி, ஐந்து தாலுகாக்களிலும், தலா ஒரு கிராமத்தில், காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் தாலுகாவில் கீழ்கதிர்பூர், உத்திரமேரூர் தாலுகாவில் மலையாங்குளம், வாலாஜாபாத் தாலுகாவில் களக்காட்டூர், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் கீவளூர், குன்றத்துார் தாலுகாவில் நாட்டரசன்பட்டு ஆகிய ஐந்து கிராமங்களில் பொது வினியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளன.இக் கூட்டங்களில், பொது மக்கள் தங்கள் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டிற்கு விண்ணப்பித்தல், நகல் ரேஷன் கார்டிற்கு விண்ணப்பித்து, மொபைல்போன் எண் மாற்றம் செய்ய போன்றவைக்கு விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.