உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  காஞ்சி வரதராஜ பெருமாளுக்கு வரும் 30ல் ரத்ன அங்கி சேவை

 காஞ்சி வரதராஜ பெருமாளுக்கு வரும் 30ல் ரத்ன அங்கி சேவை

காஞ்சிபுரம்: வைகுண்ட ஏகாதசியையொட்டி, வரும் 30ம் தேதி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்ரத்ன அங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசிக்கு, 10 நாட்களுக்கு முன், பகல் பத்து உத்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பகல் பத்து உத்சவம் கடந்த 20ம் தேதி துவங்கி, நாளை வரை பகல் பத்து உற்சவம் நடக்கிறது. டிச., 30ம் தேதி வைகுண்ட ஏகாதசி நடைபெறுகிறது. இதில், காலை முதல், மதியம் வரை வரதராஜ பெருமாள் ரத்ன அங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை