மின்கம்பத்தின் மீது சாய்ந்த புளிய மரக்கிளை அகற்றம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கையில், சாலையோரம் உள்ள மின்கம்பத்தின் மீது சாய்ந்து இருந்த புளிய மரக்கிளையை நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று அகற்றினர். காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஓரிக்கை காந்தி நகரில் சாலையோரம் உள்ள புளியமரத்தின் கிளை நேற்று, காலை 8:00 மணியளவில், மின்கம்பத்தின் மீது சாய்ந்த நிலையில் இருந்தது. வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த இச்சாலையில், மரக்கிளை முறிந்து விழுந்ததால் பெரிய அளவில் மின்விபத்து ஏற்படும் சூழல் இருந்தது. இதையடுத்து, அப்பகுதி தி.மு.க., - கவுன்சிலர் கயல்விழி, நெடுஞ்சாலைத் துறையினருக்கு புகார் தெரிவித்தார். இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் மின்கம்பத்தின் மீது சாய்ந்து இருந்த புளிய மரத்தின் கிளையை வெட்டி அகற்றினர்.