மேலும் செய்திகள்
வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
04-Aug-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே கீழம்பி கிராமத்தில் உள்ள குளம் சீரமைப்பு பணியை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார். நீர்நிலைகளையும், அதன் சுற்றுப்புறத்தையும் துாய்மைபடுத்தும் பணியை, அனைத்து மாவட்டங்களிலும், அந்தந்த கலெக்டர்கள் தலைமையில் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், சர்வதீர்த்த குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை துாய்மை படுத்தும் பணி நடந்த நிலையில், காஞ்சிபுரம் அருகே உள்ள கீழம்பி ஊராட்சியில், குண்டுமணி குளத்தை துாய்மைபடுத்தும் பணியை நேற்று கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார். துாய்மை பணி துவங்கும் முன்பாக, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை கீழம்பி தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் எடுத்துக் கொண்டனர். நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் மலர்க்கொடி, ஊராட்சி தலைவி மகாலட்சுமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
04-Aug-2025