உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மகளிர் சுகாதார வளாகம் ஊத்துக்காடில் சீரமைப்பு

மகளிர் சுகாதார வளாகம் ஊத்துக்காடில் சீரமைப்பு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஊத்துக்காடு கிராமம். இப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள எல்லையம்மன் கோவில் அருகே, 20 ஆண்டுகளுக்கு முன், பொது நிதியின் கீழ், பெண்களுக்கான பொது கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது.துவக்கத்தில் இருந்து, அப்பகுதி பெண்கள் பயன்படுத்தி வந்தனர். அதைத் தொடர்ந்து கழிப்பறை வளாகத்திற்குள் இருந்த சிறு மின்விசை பம்பு மற்றும் மோட்டார் போன்றவை பழுது காரணமாக, நாளடைவில் மகளிர் சுகாதார வளாகம் பயன்பாடு இல்லாமல் போனது.மேலும், போதிய பராமரிப்பு இல்லாததால், கட்டடத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து, கடந்த சில தினங்களுக்கு முன் நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, ஊராட்சி நிர்வாகம் சார்பில் மகளிர் சுகாதாரத்திற்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, செடிகள் அகற்றப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ