உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமடைந்த சாலை சீரமைப்பு

சேதமடைந்த சாலை சீரமைப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் பாலாற்றின் மீது பாலம் கட்டப்பட்டு, திருமுக்கூடல், சாலவாக்கம், வயலாக்கவூர், நெய்யாடுப்பாக்கம், பழவேரி, எடமிச்சி உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த வழியாக சிறுதாமூர் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் குவாரிகளில் இருந்து எம்.சாண்ட், ஜல்லிகள் ஆகியவை, லாரிகள் மூலம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.தொடர்ந்து, லாரிகள் அதிக பாரத்துடன் சென்று வருவதால், பாலத்தின் மீது அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்தது. இச்சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், பாலத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணியில், நெடுஞ்சாலை துறையினர் நேற்று ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை