உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தெரு நாய்கள் தொந்தரவு கட்டுப்படுத்த கோரிக்கை

தெரு நாய்கள் தொந்தரவு கட்டுப்படுத்த கோரிக்கை

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியின் பல்வேறு இடங்களில், தெரு நாய்கள் தொந்தரவை போக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சி தெருக்களில், நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். தெருக்களில் கூட்டமாக சுற்றும் நாய்கள், வாகனங்கள் வரும்போது சாலையின் குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்திற்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் ஏராளமானோர், வாலாஜாபாத் பேரூராட்சி தெருக்களில் தங்கி சுற்றுவட்டார தனியார் தொழிற்சாலைகளில் பணி செய்கின்றனர். இத்தொழிலாளர்கள், பணி முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்பும் போது தெருக்களில் நாய்கள் துரத்துவதால் தினமும் அச்சப்படுகின்றனர்.வாகனங்களில் செல்வோரையும் துரத்துவதால், வாகன ஓட்டிகள் கவனம் சிதறி, எதிரே வரும் வாகனங்கள் மீது மோதுதல், அல்லது விழுந்து காயமடைதல் போன்ற நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. இதனால், வாலாஜாபாத் தெருக்களில் சுற்றி திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். நாய் பிடிக்கும் வாகனம் கொண்டு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை