உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பழையசீவரம் பாலத்தில் பறக்கும் புழுதி தண்ணீர் ஊற்றி கட்டுப்படுத்த கோரிக்கை

பழையசீவரம் பாலத்தில் பறக்கும் புழுதி தண்ணீர் ஊற்றி கட்டுப்படுத்த கோரிக்கை

வாலாஜாபாத், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் - திருமுக்கூடல் பாலாற்றின் குறுக்கே மேம்பால சாலை உள்ளது.உத்திரமேரூர் ஒன்றியத்தின் பல பகுதிகளில் இயங்கும் கல் குவாரி மற்றும்கிரஷர்களில் இருந்து, லோடு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள், இந்த பாலத்தின் வழியாகசென்று வருகின்றன.விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களில் இருந்தும், தார்ப்பாய் மூடாத லாரிகளில் இருந்தும் சிதறும் எம்.சாண்ட் உள்ளிட்டவை பாலத்தின் சாலையில் பரவி கிடக்கின்றன.மேலும், மேம்பால சாலையின் இருபுறமும் மண் படிந்து காணப்படுகின்றன. பாலத்தின் மீது சிதறி கிடக்கும் எம்.சாண்ட் உள்ளிட்ட கழிவுகள்மற்றும் மண் துகள்கள், வாகனங்கள் இயக்கும் போது, காற்றின் வேகத்திற்கு புழுதியாக பறந்து, இருசக்கர வாகன ஓட்டி களை திக்குமுக்காடசெய்கிறது.வாகன ஓட்டிகளின் கண்களில் மண் விழுந்து, முன்னாள் செல்லும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கும் சம்பவங்களும்ஏற்பட்டு வருகின்றன.இனி வரும் மாதங்களில், வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், மண் புழுதியும் அதிகமாக பறக்கும் நிலை உள்ளது.எனவே, பழையசீவரம்- திருமுக்கூடல் மேம்பாலசாலையில், இடைவிடாமல் பறக்கும் மண் புழுதியை கட்டுப்படுத்த,காலை - மாலை நேரங் களில், தண்ணீர் தெளிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டி கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை