உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கைலாசநாதர் கோவில் முன் மின்விளக்கு அமைக்க கோரிக்கை

கைலாசநாதர் கோவில் முன் மின்விளக்கு அமைக்க கோரிக்கை

உத்திரமேரூர்,:உத்திரமேரூரில், 1,200 ஆண்டுகள் பழைய வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. ஹிந்து -சமய அறநிலையத் துறை,கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து, தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.கோவிலின் முன், இரவு நேரத்தில் மின் விளக்கு வசதி இல்லாமல் உள்ளது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள்,இருளில் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மேலும், அப்பகுதியில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம்.இதனால், பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. நீண்ட நாட்களாக கோவில் முன், விளக்கு அமைக்க கோரிக்கை இருந்து வருகிறது. துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர். எனவே, கைலாசநாதர் கோவில் முன், உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்த, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை