உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பூட்டி கிடக்கும் கழிப்பறையை திறக்க கோரிக்கை

பூட்டி கிடக்கும் கழிப்பறையை திறக்க கோரிக்கை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் அருகில் பூட்டி கிடக்கும் பொது கழிப்பறையை திறக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற கைலாசநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்காக, சன்னிதி தெருவில், நகர்புற, துாய்மை இந்தியா திட்டம் - 2.0 சார்பில், 36.28 லட்சம் ரூபாயில், பொது கழிப்பறை கட்டப்பட்டு, கடந்த மே மாதம் திறக்கப்பட்டது. கைலாசநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி, அப்பகுதியில் வசிப்பவர்களும் கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், ஒரு மாதமாக கழிப்பறை பூட்டியே கிடக்கிறது. இதனால், வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்ட கழிப்பறை பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, மூடிகிடக்கும் பொது கழிப்பறையை திறக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை