மேலும் செய்திகள்
காட்சிப்பொருளான மயான குளியல் அறை
07-Oct-2024
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மதுார் காலனி பகுதி மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாததால், விவசாய நிலங்கள் வழியாக செல்லும் நிலை நீண்ட காலமாக இருந்து வந்தது. இதனால் மயானத்திற்கு பாதை வசதி ஏற்படுத்த பகுதியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.அதன் தொடர்ச்சியாக, மாநில நிதி குழு மானியத்தின் கீழ், 10 லட்சம் ரூபாய் செலவில், மதுார் மயானத்திற்கு பாதை வசதி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது.பணி முடிவுற்று தற்போது பயன்பாட்டில் உள்ள நிலையில், புதிதாக அமைத்த மயான சாலையில் மின்விளக்கு வசதி இதுவரை ஏற்படுத்தவில்லை. இரவு நேரங்களில் மயான சாலை மற்றும் மயான பகுதி இருள் சூழ்ந்துள்ளது.மயானத்திற்கு மிக அருகாமையில் குடியிருப்புகள் உள்ளதால், மயான சாலை மற்றும் மயானத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
07-Oct-2024