மேலும் செய்திகள்
எரியாத மின் விளக்குகள் பழுது நீக்க கோரிக்கை
06-Sep-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நேதாஜி நகரில் பழுதடைந்து ஒளிராமல் உள்ள உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி, 23வது வார்டு நேதாஜி நகர் மும்முனை சாலை சந்திப்பு வழியாக சின்ன காஞ்சிபுரம் பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில், போதுமான வெளிச்சம் இல்லாததால், இரவு நேரத்தில் இவ்வழியாக செல்வோர் அச்சத்துடன் சென்று வந்தனர். இதனால், இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் தரும் வகையில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், லோக்சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ஒதுக்கீடு செய்த 7.50 லட்சம் ரூபாய் செலவில், நேதாஜி நகரில், கடந்த ஜூன் மாதம், உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து இரு நாட்களாக ஒளிராமல் உள்ளது. இதனால், அப்பகுதி மீண்டும் இருளில் மூழ்கி உள்ளது. இதனால், இவ்வழியாக செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
06-Sep-2025