உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை நடுவே ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்து அபாயம்

சாலை நடுவே ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்து அபாயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - அரக் கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இரு வழிச்சாலை உள்ளது.இந்த சாலையில், சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தில், நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், பரமேஸ்வரமங்கலம் வரை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையோரம், எம் - சாண்ட் கொட்டி சிமென்ட் கற்கள் அடுக்கப்பட்டு, சாலையின் இருபுறமும் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆடு, மாடுகள் ஜாலியாக சாலையில் ஓய்வு எடுத்து வருகிறது. குறிப்பாக, ஒலிமுகமதுபேட்டை மற்றும் காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை, கருப்பட்டித்தட்டடை ஆகிய பகுதிகளில் சாலை நடுவே மாடுகள் ஓய்வு எடுத்து வருகின்றன.இதனால், அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்க நேரிடுகிறது. எனவே, சாலையின் நடுவே சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, கோ சாலைகளில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை