உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தரைப்பாலம் ஓரம் அகற்றப்படாத கம்பியால் காத்திருக்கும் அபாயம்

தரைப்பாலம் ஓரம் அகற்றப்படாத கம்பியால் காத்திருக்கும் அபாயம்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழிச் சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தில், நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.தற்போது, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், பரமேஸ்வரமங்கலம் வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.தார் சாலை ஓரம், எம்.சாண்ட் கொட்டி பேவர் பிளாக் கற்களை அடுக்கி சாலை இருபுறமும் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.இருப்பினும், சிறு தரைப்பாலங்கள் ஓரம், கான்கிரீட் சாலை போடும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த இடத்தில் இரும்பு கம்பிகளை சாலை விரிவாக்க பணியாளர்கள் அகற்றவில்லை.குறிப்பாக, வேளியூர் பேருந்து நிறுத்தம் அருகே, கம்பி வளைக்கப்பட்டு உள்ளது. இது, பேருந்துகளில் இருந்து இறங்குவோரின்கால்களில் சிக்கும் அபாயம் உள்ளது.இதனால், சாலை ஓரம் நடத்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழும் அபாயத்தில் உள்ளது. இதுபோன்ற வாகன விபத்துகளை தவிர்க்க தரைப்பாலங்கள் அருகே இருக்கும் கம்பிகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ