உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகளுக்கு சிரமம்

சாலையோரம் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகளுக்கு சிரமம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழிச் சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி தொழில்வழித்தட திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.காஞ்சிபுரம் - தக்கோலம் கூட்டு சாலை வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், தார் சாலையோரம் மழைநீர் கால்வாய் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது.இதில், தண்ணீர் செல்வதற்கு ஏற்ப வழி வகை செய்யவில்லை. மேலும், சாலையோரம் போடும் குப்பை மழை நீர் கால்வாயில் விழுந்துள்ளது. இதை மர்ம நபர்கள் சிலர் தீவைத்து எரிப்பதால், வாகன ஓட்டிகளுக்கு சுவாசக்கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது.குறிப்பாக, காஞ்சிபுரம் அடுத்த, வெள்ளைகேட் மேம்பாலம் அருகே, மழைநீர் கால்வாய்யோரம் மர்ம நபர்கள் சிலர் குப்பைக்கு தீ வைத்தனர்.எனவே, சாலையோரம் குப்பை கொட்டி எரிப்போர் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ