ராமலிங்கேஸ்வரர் கோவில் புதுப்பிக்க ரூ.18 லட்சம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், வட ராமேஸ்வரம் என, அழைக்கப்படும் பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 18.26 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த பணிக்கு, ஜன., 10ம் தேதி டெண்டர் விடப்பட உள்ளது. மேலும், ஆறு மாதங்களில் திருப்பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.